Monday 20 August 2018

சங்க இலக்கியங்களில் வடமொழி (சமசுகிருதம்) சொற்கள் இருந்ததா?

இது முகநூளில் நாண்பர் ஒருவருடன் செய்த விவாதத்தில் எனது பதில்கள்:


சங்க காலம் என்பது கி.மு.நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை. அந்த காலகட்டத்தில் எழுதப்பட்டதே சங்க இலக்கியம்.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டு வரை சங்கம் மருவிய காலம், அதாவது தமிழர் அல்லாதோரின் ஆட்சிகாலம். அப்பொழுதுகூட தமிழ் எந்த சீர்கேடும் இல்லாமல் இருந்தது.

கி.பி.ஏழு முதல் ஒன்பாதம் நூற்றாண்டு வரை பத்தி இலக்கிய காலம். அந்த காலகட்டத்திலேதான் சமசுகிருதம் தமிழில் உள்வாங்கப்பட்டது. அதுதான் தமிழ் தூய்மை நிலையிலிருந்து சீர்கெட ஆரம்பித்தது. பக்தி இலக்கியம் என்ற பேரில் தேவையின்றி சமசுகிருத சொற்கள் பயன்படுத்தப்பட்டது.

தமிழர்களின் பக்தியுணர்வை பெளத்த சமண சமயங்களை தமிழகத்திலிருந்து அழிக்க பயன்படுத்திய காலமே பக்தி இலக்கியம் வளர்ந்த காலம். தமிழின் எழுத்து நடையும் இலக்கிய நடையும் சீர் கெட்டதும் இந்த காலத்தில் தான்.

சங்கத்தமிழில் சமசுகிருதம் இல்லை, அதேபோல் பக்தி இலக்கியத்தால் தமிழுக்கு எந்த நன்மையையும் கிடையாது தீமை என்பதே.

Friday 17 August 2018

மாற்று மொழி சொற்களை தவிர்ப்போம்

மாற்று மொழி சொற்கள் நிறைய நமது தமிழில் கலந்துவிட்டாலும்,
இன்றும் தூய தமிழ்ச் சொல்லை பேசும்போது அதை பெரும்பாலும் புரிந்து கொள்கிறார்கள் (அதுதான் தமிழின் சிறப்பும் கூட), அதனால் இனிமேலும் தாமதிக்காமல் கலப்பு சொற்களை நமது தாய் மொழியிலிருந்து பிடுங்கி எறியவேண்டும். அதை ஒவ்வொரு தமிழ் மகனும் தன்னில் இருந்து தொடங்கவேண்டும்.

முதலில் பேச்சிலும் எழுத்திலும் வடமொழி எழுத்துக்களை தவிர்க்கவேண்டும். மற்ற மொழி சொற்களாக இருந்தாலும் தமிழின் உச்சரிப்பிலேயே பேசுங்கள் எழுதுங்கள். அதனால் ஒன்றும் கெட்டுவிடாது. அதுதான் சரியும் கூட.

அடுத்து தூய தமிழ் சொற்களை கண்டறிந்து பேச பழகுங்கள்.

50000 ஆண்டு பெருமைமிகு நமது அன்னை தமிழை நாம் சில வருடங்களில் அழித்துவிடக்கூடாது.

வடமொழி கலப்பு சொற்களை கண்டறிய கீழ் உள்ள எனது Android செயலி உதவியாக இருக்கும். வேறேதும் உதவக்கூடிய தகவல்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.
 தமிழில் வடமொழி கலப்பு சொற்கள்